மணப்பாறை அருகே கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது. 4 யூனிட் மண்ணுடன் லாரி பறிமுதல்.

மணப்பாறை அருகே கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது. 4 யூனிட் மண்ணுடன் லாரி பறிமுதல்.
திருச்சி மாவட்டம், மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் பகுதியில் திருச்சி மாவட்ட எஸ்.பியின் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். சின்னாக்கவுண்டன்பட்டி அருகில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நான்கு யூனிட் கிரவல் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து புத்தாநத்தம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் இது சம்பந்தமாக புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி உரிமையாளர் வடக்கு கருஞ்சோலைப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் (வயது 27), லாரி ஓட்டுநர் கருஞ்சோலைப்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 26) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Next Story