இலவசமாக தாடையில் 4 கிலோ கட்டியை அகற்றி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

குமாரபாளையத்தில் இலவசமாக தாடையில் 4 கிலோ கட்டியை அகற்றி தனியார் மருத்துவமனைடாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த பானுமதி, 61, என்பவருக்கு. தாடையில் பெரிய அளவிலான கட்டி வளர்ந்து வந்தது. நாளடைவில், சுமார் 4 கிலோ எடைக்கும் அதிகமாக வளர்ந்தது. பல இடங்களில் கேட்டும் இதனை அகற்ற பல லட்சம் செலவு ஆகும் என்று கூறினர். குமாரபாளையம் ஜே..கே.கே. நடராஜா பல் மருத்துவ கல்லூரியில் சென்று பார்த்தனர். அங்கு இங்கு இந்த கட்டியை இலவசமாக அகற்ற மருத்துவமனை நிர்வாகத்தினர் தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர் ஒப்புக்கொண்டனர். இதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இந்த கட்டி அகற்றப்பட்டது. இதனை டாக்டர்கள் வினோத் தங்கராஜ், விஜய் தியாகராஜன், வெங்கடேஷ் , ,பிரவீன் உள்பட பலர் பங்கேற்றனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட பானுமதி குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர். இது பற்றி டாக்டர் குழுவினர் கூறியதாவது: -ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்த பானுமதி என்பவர், தாடையில் கட்டி உள்ளதாக வந்தார். இதனை அகற்ற வேண்டும் என்றார். நாங்கள் மருத்துவமனை நிர்வாகத்தினர் வசம் ஒப்புதல் பெற்று, இந்த கட்டியை அகற்றினோம். இப்போது அவர் நலமுடன் உள்ளார். இது போன்ற அறுவை சிகிட்சைகள் சென்னை, கோவை, போன்ற பெரு நகரங்களில் தான் நடக்கும். இதற்கு சுமார், பணம் 10 லட்சம் செலவு ஆகும். பானுமதி கூலித் தொழிலாளி என்பதால், அவருக்கு இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story