காங்கேயம் காடையூர் அருகே கார் லாரிகள் மோதி விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயம் 1 பலி.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள காடையூரில் கோவையில் இருந்து கோவிலுக்கு வந்த ஒரே குடும்பத்தை  சேர்ந்த 5 பேர். லாரிகளில் மோதி தாய் பலி தந்தை படுகாயம். மகன்,மருமகள் குழந்தை சிறிய காயங்களுடன் மீட்பு.விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை 
கோவையை சேர்ந்த தந்தையோ தியாகராஜன் (68), தாய் மரகதம் (57), மகன் நவீன் குமார் (37),மருமக அனிதா (31)  மற்றும் குழந்தை சுகன்(4) ஆகியோர் கோயமுத்தூரில் இருந்து காங்கேயம் அருகே உள்ள காடையூர் காடையீஸ்வரர் கோயிலுக்கு  சாமி தரிசனம் செய்ய கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். காடையூர் அருகே சடையபாளையம் பிரிவு அருகே கோவிலுக்கு சுமார் 1 கிலோமீட்டர் முன்பாக இரண்டு லாரிகளை முந்தி செல்ல லாரிகளின் இடையே தான் ஓட்டிவந்த காரை நவீன்குமார் இயக்கி உள்ளார். அப்போது அதே இடத்தில் சாலையின் ஓரத்தில் ஒரு லாரி நின்றிருந்தது. இதனால் ஒரே திசையில் வாகனங்கள் செல்லமுடியாமல் இரண்டு லாரிகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டது. மேலும் இரண்டு லாரிகளும் மோதியதில் கார் பலத்த சேதமடைந்தது அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் காயமடைந்த தந்தை தியாகராஜன், தாய் மரகதம் உட்பட 5 நபர்களையும் காங்கேயம் தனியார் ஆம்புலன்ஸ்சில் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே தாய் மரகதம் உயிரிழந்து விட்டதாகவும் தந்தை தியாகராஜன் படுகாயம் அடைந்துள்ளதாக கூறி  திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கார் ஒட்டிய மகன் நவீன்குமார்,மனைவி அனிதா,குழந்தை சுகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காங்கேயம் அருகே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய கோயம்புத்தூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கி அதில் தாய் பலியானது காங்கேயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story