திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4ம் கட்டமாக13 மற்றும் 6வது வார்டு பகுதிகளில் நான்கு இடங்களில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4ம் கட்டமாக13 மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் நான்கு இடங்களில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து துவக்கம் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில்ரூபாய் மூன்று கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் 3.25 கி.மீ, 3.5 மீட்டர் கான்கிரீட் சாலைகள் என 6.75கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள்அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மூன்று கட்டங்களாக பணியுங்கள் பூமி பூஜை செய்து துவக்கப்பட்ட நிலையில் இன்று நாலாவது கட்டமாக 12 வது வார்டு ஏகேஇ தெரு எண் 10 மற்றும் 9 ஆகியவற்றில் 6வதுவார்டு சின்னாங் கிணறு பகுதியில் காங்கிரீட் சாலை குமரேசபுரம் ஏழாவது வார்டு பால்காரத் தோட்டம் ரோடு பகுதியில் தார் சாலை ஆகியவை அமைக்கும் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,முன்னாள் நகர் மன்ற தலைவர் மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன் கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர்சுரேஷ்பாபு ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் சினேகா ஹரிஹரன், சுரேஷ்குமார், செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன், சண்முக வடிவு, எஸ். ரமேஷ், தாமரைச்செல்வி மணிகண்டன், ஆறாவது வார்டு திமுக கழக செயலாளர் மதன்,ஆகியோர் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர்.
Next Story