கண்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 4 பேர் கைது...2 டிராக்டர்கள்,ஜேசிபி பறிமுதல்..*

கண்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 4 பேர் கைது...2 டிராக்டர்கள்,ஜேசிபி பறிமுதல்..*
கண்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 4 பேர் கைது...2 டிராக்டர்கள்,ஜேசிபி பறிமுதல்..*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 4 பேர் கைது...2 டிராக்டர்கள்,ஜேசிபி பறிமுதல்..* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தன்குளம், சித்தர்குளம் கண்மாயில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவதாக வன்னியம்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து ரோந்து பணியில் ஈடுட்டு கொத்தன்குளம் கண்மாயில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்மாயில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய கொத்தன்குளத்தைச் சேர்ந்த பொன்இருளப்பன், ராஜபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை வன்னியம்பட்டி போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Next Story