கஞ்சா வழக்கில் 4 வாலிபர்கள் கைது : 2¾ கிலோ கஞ்சா பறிமுதல்!

X
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4பேரை போலீசார் கைது செ்யதனர். 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கபீர்தாசன் ஆகியோர் சத்யாநகர் அருகே ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வசமுத்து மகன் அருண்சுனைமுத்து (22), கால்டுவெல்காலனியைச் சேர்ந்த பாலா மகன் ராஜ்குமார் (29), டிஎம்பி காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரி (எ) மாரிலிங்கம் (24), ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தனசேகர் மகன் சன்னத் பெருமாள் (27) ஆகியோர் என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக மேற்படி போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

