ராசிபுரம் அருகே ஆன்லைனில் தொலைபேசி எண்ணை தேடி நூதன முறையில் அரிசி வியாபாரியை ஏமாற்றிய 4 பேர் கைது.2 பேர் தலைமறைவு...

ராசிபுரம் அருகே ஆன்லைனில் தொலைபேசி எண்ணை தேடி நூதன முறையில் அரிசி  வியாபாரியை ஏமாற்றிய 4 பேர் கைது.2 பேர் தலைமறைவு...
X
ராசிபுரம் அருகே ஆன்லைனில் தொலைபேசி எண்ணை தேடி நூதன முறையில் அரிசி வியாபாரியை ஏமாற்றிய 4 பேர் கைது.2 பேர் தலைமறைவு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் என்பவரது மகன் சரவணக்குமார்(35) இவர் வெண்ணந்தூர் பகுதியில் லிங்கா என்ற பெயரில் அரிசி வியாபாரம் செய்வதாக கூறி,ஆன்லைனில் தொலைபேசி எண்ணை தேடி, சென்னையைச் சேர்ந்த அருணா ஆண் (43) என்பவரை மொத்த அரிசி வியாபாரியிடம் கடந்த 11.06.24 தேதி அன்று அருணாவை தொடர்பு கொண்டு தான் அரிசி வியாபாரம் செய்வதாக தொலைபேசியில் பேசி தனக்கு ஒரு லோடு அரிசி மூட்டை வேண்டும் எனவும், தொகையை அரிசி வந்த பிறகு அனுப்புவதாக கூறுவதை அடுத்து அருணா தனது உதவியாளர் மூலம் சென்னையிலிருந்து சுமார் 17 லட்சம் மதிப்பிலான, 1153 அரிசி மூட்டைகளை வெண்ணந்தூர் அனுப்பியுள்ளார். அங்கிருந்து கொண்டுவரப்பட்ட அரிசியானது சரவணகுமாரின் வீட்டில் இறக்குமதி செய்ததை அடுத்து அருணாவின் உதவியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியும், பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஏமாற்றமடைந்த அருணா சரவணாகுமார் குறித்து எவ்வித தகவலும் தெரியாத நிலையில் கடந்த ஒரு வருடமாக இருந்த நிலையில், தற்போது அவரது மீது வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் சரவணகுமார் மற்றும் ஒரு அவரது உறவினர்கள் கூட்டாக சேர்ந்து தன்னிடம் பல லட்சம் மதிப்பின் அரிசி மூட்டைகளை வாங்கி தன்னை ஏமாற்றியதாக புகார் மனு அளித்திருந்தார். இதனை பெற்ற வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் கு. சுகவனம், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார் .நிலையில் மேலும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் ராசிபுரம் காவல் உதவி கண்காணிப்பாளர் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் உத்தரவின்படி சரவணகுமார்(35), மற்றும் அவரது தம்பி மோகன்ராஜ்(41), சீனிவாசன்(46) மற்றும் உறவினர் தனசேகரன் ஆகிய 4 பேரை வெண்ணந்தூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரவணகுமார் மனைவி சுதா,உறவினர் வேல்முருகன் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்ட கும்பலானது தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகளை இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு ஏமாற்றியது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்த நிலையில் ஆனால் தற்போது அவர்கள் மீது எவ்வித புகார்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் இந்த வழக்கில் விரைவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கு.சுகவனம், மற்றும் காவலர்கள் துர்கை சாமி, சந்திரசேகர், மகேந்திரன் ஆகியோரை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story