ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 4.ம். ஆண்டாக 2 லட்சம் வளையல் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்:

X
Rasipuram King 24x7 |28 July 2025 8:18 PM ISTராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 4.ம். ஆண்டாக 2 லட்சம் வளையல் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி கடந்த இரண்டு ஆடி வெள்ளிக்கிழமை களில் அம்மனுக்கு மாங்கல்ய கயிறு அலங்காரம், ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் ஆகியவை கோவில் பூசாரிகள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிலையில் இன்று திங்கட்கிழமை ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட இரண்டு (2) லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்கள் கொண்டு 4.ம்.ஆண்டாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள பல்வேறு விநாயகர், முருகர், மற்றும் பரிகார தெய்வங்களுக்கும் கோவில் நுழைவாயில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வளையல்கள் அலங்கரித்து கோவில் பூசாரிகள் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு ராசிபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், ஆத்தூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் காலை முதலே நிண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
