குமரி : அழிக்காலில் 4. 28 கோடியில் கடலரிப்பு தடுப்பு சுவர்
Nagercoil King 24x7 |15 Jan 2025 3:57 AM GMT
நாகர்கோவில்
குமரி மாவட்ட கடலோர பகுதிகள் ஆண்டுதோறும், ஏப்ரல், மே மாதங்களில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதில் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அழிக்கால் கிராமம் பெரும்பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. எனவே இந்த பகுதியில் கடல் சீற்றம், கள்ளக்கடல் நிகழ்வுகள் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து இது தொடர்பாக பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்ட செயற்பொறியாளர் கூறுகையில், ‘அழிக்கால் கிராமத்தை பாதுகாக்கும் வகையில் சேதமடைந்த கடலரிப்பு தடுப்பு சுவரை 560 மீட்டர் நீளத்திற்கு மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.4.28 கோடியில் 2024-25க்கு தரப்படுத்தப்பட்ட விலைப்பட்டியலின்படி மதிப்பீடு தயாரித்து நிர்வாக ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது அந்த மதிப்பீடானது தலைமை பொறியாளர், வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம் அலுவலகத்தில் பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவித்தனர்.
Next Story