திருக்காடுதுறையில் பணம் வைத்த சோதனை 4- பேர் கைது. ரூ 300 பறிமுதல்.
திருக்காடுதுறையில் பணம் வைத்த சோதனை 4- பேர் கைது. ரூ 300 பறிமுதல். வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் சண்முகானந்தா வடிவேலுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜனவரி 19ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில், திருக்காடுதுறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள பம்ப்ஹவுஸ் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட திருக்காடுதுறை பகுதியைச் சேர்ந்த இளையராஜா,பூபதி, சக்திவேல், சண்முகசுந்தரம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர். நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story




