டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 33,670 போ் பங்கேற்பு

X
தென்காசி மாவட்டத்தில் 143 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 33,670 போ் எழுதினா். இத்தோ்வில் பங்கேற்க 39,240 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தோ்வில் 33,670 போ் பங்கேற்றனா்; 5,570 போ் பங்கேற்கவில்லை.
Next Story

