கிருஷ்ணகிரியில் 4 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

கிருஷ்ணகிரியில் 4 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

மதுக்கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியது, நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த மதுக்கூடங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் 19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை மூட வேண்டும்.

அதே போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 4. 6. 2024 அன்றும் ஒரு நாள் மதுபான கடைகளை மூட வேண்டும். இந்த நாட்களில் விதி முறைகளை மீறி மது விற்பனை செய்தாலும் கொண்டு சென்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

Tags

Next Story