ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது 550 கிராம் கஞ்சா, 3 பட்டாக்கத்திகள் பறிமுதல்...*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது 550 கிராம் கஞ்சா, 3 பட்டாக்கத்திகள்  பறிமுதல்...*
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது 550 கிராம் கஞ்சா, 3 பட்டாக்கத்திகள் பறிமுதல்...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது 550 கிராம் கஞ்சா, 3 பட்டாக்கத்திகள் பறிமுதல்... விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் காவல் நிலையம் போலீஸார் குற்றத்தடுப்பு தொடர்பாக வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் விலக்கு பகுதியில் இரு பைக்குகளில் வந்த 6 பேரை நிறுத்தி சோதனை செய்த போது, 550 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. பைக்கில் வந்தவர்களில் சுரேஷ்லிங்கம் சிவகாசி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால், அவர்கள் தங்கி இருப்பதாக கூறிய வீட்டில் சோதனை செய்த போது, 3 பட்டா கத்திகள், 550 கிராம் கஞ்சா, எடை இயந்திரம் ஆகியவை இருந்தது தெரியவந்தது . இதனை அடுத்துசிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ்லிங்கம், மாரியப்பன், அர்ஜுனைராஜன், ஹரிஹரன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தப்பி ஓடிய கார்த்திக், காளிமுத்து ஆகிய இருவரை தேடி வருகின்றனர். மேலும் கொலை வழக்கில் கைதான சுரேஷ்லிங்கம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவர்கள் கிருஷ்ணன்கோவில் அருகே தனியார் பல்கலையில் பயிலும் தங்கள் ஊரை சேர்ந்த ஹரிஹரன் தங்கி உள்ள வீட்டில் தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.இந்நிலையில் 4 பேரை கைது செய்து, 550 கிராம் கஞ்சா, 3 பட்டா கத்தி, 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து. தப்பியோடிய இருவரை கிருஷ்ணன் கோவில் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story