மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 4 -ம் நாளான இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் 65 பயனாளிகளுக்கு ரூ.66.68 இலட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்*.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 4 -ம் நாளான இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் 65 பயனாளிகளுக்கு ரூ.66.68 இலட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்*.
கிருஷ்ணராயபுரம்- 24.01.2025 மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 4 -ம் நாளான இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் 65 பயனாளிகளுக்கு ரூ.66.68 இலட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கரூர் நாடளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் குளித்தலை இளங்கோ அரவக்குறிச்சி, சிவகாமசுந்தரிகிருஷ்ணராயபுரம் ஆகியோர் முன்னிலையில் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 4-ம் நாளாக பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மகத்தான திட்டங்களில் ஒன்றான திட்டம் மக்களுடன் முதல்வர் திட்டம் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் நேரிடையாக வந்து அரசு அலுவலர்கள் உங்களது கோரிக்கை மனுக்களை பெற்று அதனை பரிசீலித்து, 30 நாட்களுக்குள் தீர்வுகாண வேண்டுமென ஆணையிட்டுள்ளார்கள். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 4-ம் நாளான கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பில்லாபாளையம். மாவத்தூர், பாலவிடுதி மற்றும் கடவூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் இம்முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல அது அவர்களுடைய இரத்தம், வியர்வை எனவே, அரசு அலுவலர்கள் அதனை தனி கவனம் செலுத்தி பரிசீலித்து அதற்கு உரிய தீர்வுகளை விரைவாக வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். கடந்த 3 நாட்களாக கரூர் குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 14 முகாம்கள் மூலம் 5,482 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பில்லாபாளையம் ஊராட்சியில் தாட்கோ மூலம் 5 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கடன் உதவித் தொகையும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக 7 பயனாளிகளுக்கு ரூ.90,000 மதிப்பீட்டில் நலிவுற்றோர் உதவித்தொகைகளும், கூட்டுறவுத் துறையின் சார்பாக 5 ரூ.7,42,500 மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும். மாவத்தூர் ஊராட்சியில் கூட்டுறவுத் துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.90,000 மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக 3 மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், பாலவிடுதி ஊராட்சியில் கூட்டுறவுத் துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.10.25 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக 8 மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ.14.20 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், கடவூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சமுதாய மூலதன நிதி திட்டத்தின் கீழ் 10 மகளிர்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், கூட்டுறவுத் துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.11.37 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும், என மொத்தம் 65 பயனாளிகளுக்கு ரூ.66.68 இலட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், குளித்தலை சார் ஆட்சியர் தி.சுவாதி ஸ்ரீ, தாட்கோ மாவட்ட மேலாளர் முருவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சக்தி பாலகங்காதரன். உதவி இயக்குநர் ஊராட்சிகள் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story