ஆம்பூரில் கைத்துப்பாக்கி வைத்திருந்த இளைஞர் மற்றும் அவரது சகோதரி கைது.! அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், 7 கத்திகள், 10 தோட்டாக்கள் பறிமுதல்..

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கைத்துப்பாக்கி வைத்திருந்த இளைஞர் மற்றும் அவரது சகோதரி கைது.! அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், 7 கத்திகள், 10 தோட்டாக்கள் பறிமுதல்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த முகமது மீரான் என்பவரின் மகன் ஆசிப் என்ற இளைஞர் ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில், இவரது வீட்டில் ரகசிய கைத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக நுண்ணறிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆசிப்பை ஆம்பூர் நகர காவல்துறையினர் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கைது செய்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டில் 7 கத்திகள் மற்றும் மற்றும் 10 தோட்டாக்கள் இருந்தது கண்டயறிப்பட்டது, மேலும் கைத்துப்பாக்கிகள் இல்லாதை தொடர்ந்து ஆசிப்பிடம் காவல்துறையினர் மேலும் விசாரணை செய்த போது, வேலூர், முள்ளிபாளையம் பகுதியில் உள்ள தனது சகோதரி ஆஜிரா வீட்டில் வீட்டில் 4 கைத்துப்பாக்கிகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தையடுத்து, வேலூர் முள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஆசிப்பின் சகோதரி வீட்டிலிருந்து 4 கைத்துப்பாகிகள் மற்றும் கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆசிப்பின் வீட்டிலிருந்து 7 கத்திகள், 10 தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஆசிப் மற்றும் அவரது சகோதரி ஆஜிராவை ஆம்பூர் நகர காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்
Next Story

