பள்ளிபாளையம் பகுதியில் 4 kg கஞ்சாவுடன் பெண் கைது மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

X
Tiruchengode King 24x7 |28 Nov 2025 9:36 PM ISTநாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நாலு கிலோ கஞ்சாவுடன் இருந்தசெல்வி 51 என்ற பெண் கைது மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு அமுல் பிரிவு காவல் நிலைய ஆய்வாளார் பிரபாவதிக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் போலீசாருடன் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு சென்ற போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் நின்றிருந்த பெண்ணை பிடித்து சோதனை இட்டனர். அப்போது அந்த பெண் பையில் நாலு கிலோ 100 கிராம் எடை உள்ள கஞ்சா இருந்தது தெரிய வந்தது இதன் அடிப்படையில் அவரை கைது செய்த மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் செல்வி என்பதும் கணவர் அமுல்ராஜ் 15 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார் என்பதும் இவருக்கு இரண்டு மகன்கள்உள்ள நிலையில் அவர்கள் தனியே வசித்து வரும் நிலையில் செல்வி பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து ஒரிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கி வைத்து கிலோ கணக்கில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.மேலும் நடத்திய விசாரணையில் இவர் மீது ராய வேலூர் பகுதியில் 24 கிலோ கஞ்சா வழக்கு ஒன்றும், சேலம் எம் ஐ பி ல்32 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ஒரு வழக்கும் இருப்பது தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட செல்வியிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அங்கு நீதிபதி பத்மப்ரியா செல்வியை 15 நாள் நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து செல்வி சேலம் பெண்கள் மத்தியசிறையில் அடைக்கப் பட்டார்.
Next Story
