அடிக்கடி வாந்தி எடுத்த 40 நாள் ஆன பெண் குழந்தை உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
Karur King 24x7 |7 Aug 2024 12:41 PM GMT
அடிக்கடி வாந்தி எடுத்த 40 நாள் ஆன பெண் குழந்தை உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
அடிக்கடி வாந்தி எடுத்த 40 நாள் ஆன பெண் குழந்தை உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா இடையபட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி மனைவி கீர்த்தனா வயது 26. இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பால் போட்டு எப்போதெல்லாம் சிறிது நேரத்தில் வாந்தியாக வெளியே வந்து விட்டது. தொடர்ந்து சில நாட்களாக இது போன்று இருந்ததால் குழந்தையை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரியோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை முடித்து பிறகு வீடு திரும்பினர். ஆயினும் குழந்தைக்கு உடல் நலம் சரியாகவில்லை தொடர்ந்து அதே நிலை நீடித்ததால் குழந்தையின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குழந்தையை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆகஸ்ட் 4ம் தேதி இரவு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கீர்த்தனா காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த 40 நாள் பெண் குழந்தையை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தி, பிறகு பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story