வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 40 லட்சத்திற்க்கு பருத்தி ஏலம்

X
Edappadi King 24x7 |14 Sept 2024 5:08 PM ISTசேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது.
சனிக்கிழமை இன்று நடைப்பெற்ற பருத்தி டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 80 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 1500 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம் 370 லாட்டுகளாக வைத்து ஏலம் விடப்பட்டது. BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 7750 முதல் அதிக பட்சமாக ரூபாய் 8650 வரையிலும் கொட்டு ரகம் பருத்தி ரூ 4300 முதல் ரூ 5400 விலை விற்று தீர்ந்து மொத்தம் 40லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைப்பெற்றது. அடுத்த டெண்டர் 21.09.24 சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
