சூதாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்ச்சம்பட்டி ஊராட்சி ஒத்தக்கடை எனும் பகுதியில் ரிலாக்ஸ் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட கிளப் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு கரூர் திருச்சி மாவட்ட பகுதியிலிருந்து ஏராளமானோர் வாகனங்களில் வந்து சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கரூர் மாவட்ட எஸ்பிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை எடுத்து எஸ்.ஐ அகிலன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 40 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்து தோகைமலை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த தோகைமலை போலீசார் 15 இருசக்கர மோட்டார் வாகனங்கள், ஒரு கார், ஒரு ஆட்டோ, 38 செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.215000 பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story