ராசிபுரம் தொகுதியில் சுமார் 40 கோடி மதிப்பில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் அமைச்சர் மதிவேந்தன் தகவல்...

ராசிபுரம் தொகுதியில் சுமார் 40 கோடி மதிப்பில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் அமைச்சர் மதிவேந்தன் தகவல்...
X
ராசிபுரம் தொகுதியில் சுமார் 40 கோடி மதிப்பில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் அமைச்சர் மதிவேந்தன் தகவல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர். என். ராஜேஷ்குமார், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் கலந்து கொண்டு 495 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர். மாவட்ட ஆட்சியர் உமா பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் சுமார் 20 ஆயிரத்து 500 வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளோம். இன்றைக்கு நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் 495 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளோம். இந்த வீட்டு மனை பட்டா பெறக்கூடிய குடும்பங்களுக்கு அடுத்தாண்டு கனவு இல்லம் அமையக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் கனவு இல்லம் உத்தரவு கொடுத்த மாவட்டம் நாமக்கல் மாவட்டமாகும். இதுவரைக்கும் கிராமப்புறங்களுக்கு மட்டும்தான் பட்டா கொடுத்துள்ளோம். தமிழக முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க நகராட்சி பகுதியில் வரைமுறைப்படுத்த புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றார்.. ராஜ்யசபா உறுப்பினர் ராஜேஷ் குமார் பேசுகையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு நமது அரசு இந்த பட்டாக்களை வழங்கியிருக்கிறோம். கார்கூடல்பட்டி 20 பேருக்கும், தொ.ஜேடர்பாளையம் பகுதியில் 18 பேருக்கும், மூலப்பள்ளிப்பட்டி பகுதியில் 23 பேருக்கும் கட்டனாச்சம்பட்டி பகுதியில் 42 பேருக்கும், புதுப்பாளையத்தில் 8 பேருக்கும், வெண்ணந்தூரில் 3 பேருக்கு நத்தம் பட்டாக்கள் வழங்கப்படுகிறது என்றார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு, 140 கோடி ரூபாய் ஒதுக்கி அங்கு சாலை அமைக்கப்படுகிறது. இதனால் சுமார், 4000 மக்கள் பயனடைய உள்ளனர். ராசிபுரம் தொகுதியில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா சுமார் 40 கோடியில் வர உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராமசாமி, ஜெகநாதன், துரைசாமி, ராசிபுரம் நகர மன்ற தலைவர் திருமதி முனைவர் ஆர்.கவிதா சங்கர், நகரக் கழகச் செயலாளர் என்.ஆர்.சங்கர், மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story