*கடவூர் தாலுகாவுக்கு உட்பட்ட கழுகூர் கிராமத்தில் அரசால் வழங்கப்பட்ட இடங்களை அளவீடு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம்

*கடவூர் தாலுகாவுக்கு உட்பட்ட கழுகூர் கிராமத்தில் அரசால் வழங்கப்பட்ட இடங்களை அளவீடு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம்
X
*கடவூர் தாலுகாவுக்கு உட்பட்ட கழுகூர் கிராமத்தில் அரசால் வழங்கப்பட்ட இடங்களை அளவீடு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.*
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், கழூகூர் கிராமம் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக சார்பில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அப்பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இரண்டு வருடங்கள் ஆகியும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் அளந்து தராததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று தான்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழங்கப்பட்ட பட்டாக்களின் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஒவ்வொரு பொது மக்களுக்கும் வீட்டு மனை பட்டாக்களை சரியான முறையில் பிரித்துக் கொடுக்கபட வேண்டும் என மேலும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் ஆன சாக்கடை வசதி குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் கிடைக்கும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
Next Story