மின்சார வாரியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்பநிலை காலி பணி இடங்கள் நிரப்ப வேண்டும், ஸ்மார்ட் திட்டத்தை கைவிட வேண்டும்,

மின்சார வாரியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்பநிலை காலி பணி இடங்கள் நிரப்ப வேண்டும், ஸ்மார்ட் திட்டத்தை கைவிட வேண்டும்,
X
6 சதவீத ஊதியஉயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும், ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டமான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை அனுமதிக்க கூடாது.
மின்சார வாரியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்பநிலை காலி பணி இடங்கள் நிரப்ப வேண்டும், ஸ்மார்ட் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக் கூலி வழங்கிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றம், கள உதவியாளர் பணி மாற்றம், 6 சதவீத ஊதியஉயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும், ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டமான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை அனுமதிக்க கூடாது. மின்வாரியம் லட்சம் கோடி கடனில் உள்ள நிலையில் நிதிச் சுமை அதிகரிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்டகோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியூ பெரம்பலூர் வட்ட கிளையின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்ததுஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையை மாநிலச் செயலாளர் அகஸ்டின் விளக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், விளக்கினார். குமாரசாமி ,செல்வகுமாரி, தினேஷ் ஆகியவர்கள் முன்னிலை வகித்தனர். மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாவட்ட நிர்வாகி கருணாநிதிநல அமைப்பின் மாவட்ட நிர்வாகி கருணாநிதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பாலகிருஷ்ணன் கோட்ட நிர்வாகி கலந்து கொண்டார். கோட்ட நிர்வாகி மணி நன்றி கூறினார்.
Next Story