திருமாநிலையூர்-ரூ 40 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
திருமாநிலையூர்-ரூ 40 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமண நிலையப் பகுதியில் ரூபாய் 40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த புதிய பேருந்து நிலையத்தை நேற்று மாலை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ சிவகாமசுந்தரி கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆணையர் சுதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டுசிறப்பித்தனர். புதிதாக திறக்கப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






