கரூர்-கொங்கு மேல்நிலைப்பள்ளி 40 ஆவது மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
கரூர்-கொங்கு மேல்நிலைப்பள்ளி 40 ஆவது மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. கொங்கு மேல்நிலைப் பள்ளி, யங் இண்டியன்ஸ் மற்றும் காஸ்பரோ செஸ் அகாடமியும் இணைந்து மாவட்ட அளவிலான செஸ் போட்டி கரூரை அடுத்த வெண்ணைமலைகொங்கு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. கொங்கு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பாலு குருசுவாமி முன்னிலை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 7, 9, 11, 13 வயதுக்குட்பட்ட சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் இடத்தை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு முதல் பரிசாக சைக்கிள் மற்றும் கோப்பைகளை கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் வஸ்திர ரத்னா கொங்கு மாமணி அட்லஸ் எம் நாச்சிமுத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் யங் இந்தியன்ஸ் சேர்மன் யோகேஷ் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளராக காஸ்பரோ செஸ் அகாடமியின் நிறுவனர் நேஷனல் ஆர்பிட்டர் புகழேந்தி போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
Next Story







