சிஐடியு தொடர் போராட்டம் வெற்றி, தொழிலாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு ரூ.40 லட்சம் வழங்கிய மாநகராட்சி
சிஐடியு தொடர் போராட்டத்தால், தஞ்சை மாநகராட்சியில் ஓய்வுபெற்ற துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, ஈட்டிய விடுப்பு ரூபாய் 40 லட்சம் பெற்றுத் தரப்பட்டது. தஞ்சை மாநகராட்சியில் சிஐடியு நிரந்தர துப்பரவு தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தையொட்டி, 2015 முதல் 2020 வரை பணி ஓய்வு பெற்ற 49 தொழிலாளர்களில், 23 தொழிலாளர்களுக்கு, முதல் தவணையாக ஈட்டிய விடுப்பு தொகை ரூபாய் 40 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழங்கினார். இதில், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் க.அன்பு, சங்க நிர்வாகிகள் பாஸ்கர், அய்யனார், கலியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story



