வார சந்தையில் 40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகாமையில் உள்ள புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக வார சந்தை நடைபெறுகிறது. நேற்று செப்டம்பர் 24 புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் மாடுகள் ரூ.6500 முதல் ரூ.27000 ஆடுகள் ரூ.5500 முதல் ரூ.10,500 வரை என 40 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story






