தூய்மை மிஷன் 4.0 கழிவு சேகரிப்பு இயக்கத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |12 Dec 2025 10:29 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில், தூய்மை மிஷன் 4.0 கழிவு சேகரிப்பு இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தூய்மை மிஷன் 4.0 ஒட்டுமொத்த கழிவு சேகரிப்பு இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டத்தில், தூய்மை மிஷன் 4.0 ஒட்டுமொத்த கழிவு சேகரிப்பு நிகழ்வானது (Collection drive 4.0) அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்கள் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில், தூய்மை மிஷன் 4.0 ஒட்டுமொத்த கழிவு சேகரிப்பு இயக்கத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை உறுதிமொழியினை மருத்துவ கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலர், அனைத்து மருத்துவ துறை தலைவர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.மேலும், மாவட்ட ஆட்சியர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அப்புறப்படுத்தப்படவுள்ள தரம்பிரிக்கப்பட்ட மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், காட்போர்டு அட்டை கழிவுகள், ஃபர்னிச்சர் கழிவுகள், இரும்புக்கழிவுகளை பார்வையிட்டார்.இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சு.வடிவேல், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.இரா.குணசேகரன், உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


