திருச்செங்கோடு கே எஸ் ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பட்டமளிப்பு விழா 40 மாணவர்களுக்கு கல்வி நிறுவன அட்மின் இயக்குனர் மோகன் பட்டங்களை வழங்கினார்

திருச்செங்கோடு கே எஸ் ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பட்டமளிப்பு விழா 40 மாணவர்களுக்கு கல்வி நிறுவன அட்மின் இயக்குனர் மோகன் பட்டங்களை வழங்கினார்
X
திருச்செங்கோடு கே எஸ் ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பட்டமளிப்பு விழாநடைபெற்றது.நிகழ்ச்சியில் 40 மாணவர்களுக்கு கல்வி நிறுவன அட்மின் இயக்குனர் மோகன் பட்டங்களை வழங்கினார்.
திருச்செங்கோடு கே எஸ் ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பட்டமளிப்பு விழாகல்வி நிறுவன வளாகத்தில்உள்ள சில்வர் ஜூப்ளி அரங்கில் நடைபெற்றது. ஏசி மெக்கானிக் மற்றும் கம்ப்யூட்டர் நியூமரிக் கண்ட்ரோல் ஆகிய பிரிவுகளில் படித்த இரண்டு மாணவிகள் உள்ளிட்ட40 மாணவ மாணவியர்களுக்கு கல்வி நிறுவன அட்மின் இயக்குனர் மோகன் பட்டங்களை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கோபிநாத் தலைமை வகித்தார் உதவி பேராசிரியர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார் மேலும் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு உறுதிமொழி ஏற்படு நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தார்.நிகழ்ச்சியில் பேசிய அட்மின் இயக்குனர் மோகன் கூறியதாவது இன்றைய காலகட்டத்தில் பட்டம் பெறுபவர்களை விட தொழில்நுட்ப படிப்புபடிப்பவர்களுக்கு தான் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது அதிலும் குறிப்பாக ஏசி இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலையில் அதற்கு போதுமான மெக்கானிக்கல் இல்லாத சூழல்தான் இன்றும் இருக்கிறது வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளது அதேபோல் கம்ப்யூட்டர் நியூமரிக்கண்ட்ரோல் துறையிலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளது தொழில் முனைவோர்களாக மாணவர்கள் தங்களை உருவாக்கிக் கொள்ள முன்வர வேண்டும் தொடர்ந்து அப்டேட் ஆகி கொண்டு இருந்தால்தான் இன்றைய உலகில் வெற்றிக்கொடி நாட்ட முடியும் என கூறினார்.
Next Story