ராசிபுரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி.கிணற்றில் விழுந்ததில் 2 கால்கள் முறிவு ஏற்பட்ட நபரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்...

X
Rasipuram King 24x7 |10 Feb 2026 8:27 PM ISTராசிபுரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி.கிணற்றில் விழுந்ததில் 2 கால்கள் முறிவு ஏற்பட்ட நபரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மலைவேப்பங்குட்டை பகுதியில் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது தோட்டத்தில் உள்ள 40 அடி கிணற்றை பராமரிக்கும் பணிக்காக அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் பணிக்கு சென்றுள்ளார். கிணற்றை சுற்றி முட்புதவர்கள் இருந்ததால் ரவி அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரவி தண்ணீர் இல்லாத 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இருந்து அலறல் சத்தம் வந்ததால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரவியை மீட்பதற்காக ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி ரவியை உயிருடன் மீட்டனர். சுமார் 40 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் ரவி தவறி விழுந்ததால் அவரது 2 கால்களும் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பாக பேளுகுறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story
