தனியாக இருந்த தாய், மகளை கத்தியை காட்டி மிரட்டி 40 சவரன் தங்கநகை மற்றும் 5 லட்சம் பணம் கொள்ளை

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருமண அழைப்பிதழ் வைப்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை கத்தியை காட்டி மிரட்டி 40 சவரன் தங்கநகை மற்றும் 5 லட்சம் பணம் கொள்ளை சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட முஹமதுபுறா மசூதி 2 ஆவது தெருவை சேர்ந்தவர் முபாரக் பாஷா இவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் நிலையில், இன்று முபாரக் பாஷா தனது கடைக்கு சென்ற போது, அவரது வீட்டில் அவரது மனைவி சுல்தானா மற்றும் அவரது மகள் மற்றும் தனியாக இருந்துள்ளனர், இந்நிலையில் இதனை அறிந்த பர்தா அணிந்து வந்த மர்மநபர் முபாரக் பாஷாவின் வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழ் வைப்பது போல் வீட்டினுள் சென்றுள்ளார், அப்பொழுது சுல்தானாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளார், அப்பொழுது சுல்தானாவின் மகள் கத்த முயன்ற போது அவரது வாயில் துணியை வைத்து அடைத்து அறையில் பூட்டியுள்ளார், அதனை தொடர்ந்து வீட்டின் அறையில் இருந்த பீரோவை உடைத்து, சுல்தானா தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 40 சவரன் தங்கநகை மற்றும் 5 லட்சம் பணத்தை அந்நபர் கொள்ளையடித்துச்சென்றுள்ளார், பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் கொள்ளைச்சம்பவம் நடைப்பெற்ற வீட்டில் ஆய்வு செய்த போது, கொள்ளையடிக்க வந்த நபர் கொண்டு வந்த திருமண அழைப்பிதழ் வெறும் வெள்ளை காகிதம் என்பது தெரியவந்துள்ளது, அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. அதனை தொடர்ந்து கொள்ளைச்சம்பவம் நடைப்பெற்ற வீட்டில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி நேரில் ஆய்வு செய்தார்.. மேலும் ஆம்பூரில் பட்டபகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் வீட்டினுள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி 40 சவரன் தங்கநகை மற்றும் 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story

