கோவை: 40 லட்சம் ரூபாய் மோசடி வழக்கு: ராஜஸ்தான் வாலிபருக்கு 6 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு!

X
கோவைச் சேர்ந்த மதன்குமார் என்பவரிடம் ஆன்லைன் ஸ்டாக் முதலீட்டின் பெயரில் ஆசை வார்த்தைகள் கூறி, மொத்தம் ரூ.47.4 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதில் ரூ.40 லட்சம், ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேந்திர தேவால் என்பவரின் வங்கி கணக்கில் அனுப்புமாறு கூறி பெற்றுக் கொண்டார். இதையடுத்து மதன்குமார் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேந்திர தேவாலை கைது செய்தனர். வழக்கை நேற்று விசாரித்த கோவை குற்றவியல் நீதிமன்றம், சுரேந்திர தேவாலுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Next Story

