விமான விபத்துகளை தவிர்க்க டி.ஜி.எஸ். ஏ வில் உள்ள 40% பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்-e-NAM ஆய்வுக்கு பின் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி*

விமான விபத்துகளை தவிர்க்க டி.ஜி.எஸ். ஏ வில் உள்ள 40% பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்-e-NAM ஆய்வுக்கு பின் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி*
X
விமான விபத்துகளை தவிர்க்க டி.ஜி.எஸ். ஏ வில் உள்ள 40% பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்-e-NAM ஆய்வுக்கு பின் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி*
ஈ-நாம் (e-NAM) திட்டத்தை விரிவாக்க செய்து மாற்றங்களை கொண்டுவர பாராளுமன்றத்தில் முறையிடப்படும்;விமான விபத்துகளை தவிர்க்க டி.ஜி.எஸ். ஏ வில் உள்ள 40% பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்-e-NAM ஆய்வுக்கு பின் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகரில் செயல்பட்டு வரும் e-NAM எனப்படும் தேசிய வேளாண் விற்பனை மையத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வியாபார ஸ்தலமான விருதுநகரில் விவசாயிகளையும்,வியாபாரிகளையும் ஒருங்கிணைக்கும் e-NAM மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததாகவும் இம்மையத்தை 25% விவசாயிகளே பயன்படுத்தி வருவதாகவும்,மீதமுள்ள 75 % விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தில் உள்ள சிறுசிறு கொள்கை ரீதியான குறைகளை களைய வேளாண் அமைச்சரிடமும்,பாராளுமன்றத்திலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுத்து 100 % இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ஈ-நாம் (e-NAM) திட்டத்தை விரிவாக்க செய்து மாற்றங்களை கொண்டுவர பாராளுமன்றத்தில் முறையிடப்படும்; என்றார். மாம்பழ விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருப்பதை தாம் வழிமொழிவதாகவும் இக்கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் எனதாம் நம்புவதாகவும் தெரிவித்தார். விமான விபத்துகளை தவிர்க்க டி.ஜி.எஸ். ஏ வில் உள்ள 40% பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் பொதுமக்களின் உயிரை இந்த அரசு சாதாரணமாக நினைக்கிறது என்றும் அகமதாபாத் விமான விபத்து குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒத்துவைப்பு தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் விபத்துக்கான காரணத்தையும் இனி விபத்து நடக்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை குறித்தும் கேள்வி கேட்கப்படும் என்றார். முருக பக்தர்கள் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,சினிமா செட்டுபோல் 6 படை வீட்டையும் செட் போட்டு காண்பித்தால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் கோவில் நிலங்களையும் உண்டியல்களையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி கையகப்பட்டுத்த நினைக்கிறது என்றார். பேட்டி: மாணிக்கம் தாகூர் - பாராளுமன்ற உறுப்பினர் ( விருதுநகர்)
Next Story