ராமநாதபுரம் மீனவர் வளையில் சிக்கிய 400 கிலோ எடை கொண்ட மீன்

X
ராமநாதபுரம் பாம்பன் வடக்கு கடற்கரை துறைமுகத்திலிருந்து 600 க்கும் நாட்டுப் படகுகள் மீன்பிடித் தொழில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய பாம்பனைச் சேர்ந்த சாம்சன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 மீட்டர் நீளமுடைய 400 கிலோ எடை கொண்ட கொப்பர குலா என்றழைக்கப்படும் வாள் மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் 400 கிலோ எடை கொண்ட கொப்பர குலா மீனை ஏலம் விட்டனர் இதில் பல்வேறு வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் கேட்கப்பட்டு எடுக்கப்பட்ட கேரளா மீன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.140 என ரூ.56 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றார். இந்த கொப்பர குலா மீன் 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதால் மீனவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் மேலும் இந்த மீனை பாம்பன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்
Next Story

