நிதி நிறுவன நடத்தி 400 பேரிடம் பேரை ஏமாற்றிய நபர் கைது

நிதி நிறுவன நடத்தி 400 பேரிடம் ரூ.1 கோடி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி
அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி ஆவடி காவல் ஆணையர் சங்கர் அவர்களிடம் அளித்த புகாரில் தினத்தந்தி செய்தித் தாளில் வெளியான கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்ததாகவும் அதில் திருமுல்லைவாயிலை சேர்ந்த செபாஸ்டின் என்பவரை தொடர்பு கொண்டு அவர் SSNL ஸ்மார்ட் அக்கவுண்ட் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட் சிபில் ஸ்கோர் உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லாமல் 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை லோன் வாங்கி தருவதாக வாவ் புட் நிறுவனம் மூலம் நிறுவனத்தின் முதலீடு செய்தல் அதற்கு 5% லாபம் தருவதாக கூறி அதன் பேரில் SSNL ஸ்மார்ட் அக்கவுண்ட் நிறுவனத்தில் 2 லட்சம் கடன் வழங்க குமார் 400 பேரிடம் பணமாக 1.5 கோடி வரை வாங்கி தலைமுறைவாகியுள்ளதாக வாவ் புட் நிறுவனத்தில் தன்னை போன்ற மேலும் 300 க்கும் மேற்பட்டவர்களிடம் 5% லாபம் பெற்று தருவதாக கூறி பணம் வசூல் செய்து குடும்பத்துடன் தலைமறைவாக இருந்தவரை தூத்துக்குடியில் பதுங்கி இருந்த செபாஸ்டினை நேற்று கைது செய்தனர். இவரை ஆவடி அழைத்து வந்து விசாரணை நடத்தி அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி கும்பல்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story