400 லிட்டர் மண்ணெண்ணெயுடன் சொகுசு கார் பறிமுதல்

  400 லிட்டர் மண்ணெண்ணெயுடன் சொகுசு கார் பறிமுதல்
X
நித்திரவிளை
குமரி மாவட்டத்தில் பைபர் படகுகளுக்கு மானிய  விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்  வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு கடத்தி விற்பனை செய்வது தொடர் கதையாக உள்ளது.       நேற்று மாலையில் ஒரு மீனவ கிராமத்தில் இருந்து காரில் மண்ணெண்ணெய் கேரளா கடத்தி செல்வதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நித்திரவிளை எஸ்ஐ ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் பூந்தோப்பு காலனி பகுதியில் ரோந்து சென்று சம்பந்தப்பட்ட சொகுசு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.        அப்போது காரில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் 420 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சொகுசு காரையும் மண்ணெண்ணெயுடன் பறிமுதல் செய்து காரை ஓட்டி வந்த தூத்தூர் பகுதியில் வசிக்கும் கோவையை சேர்ந்த ஜார்ஜ் அமல்ராஜ் (45) என்பது கைது செய்து நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Next Story