ரமலான் பண்டிகை முன்னிட்டு 400 ஏழைகளுக்கு தமுமுக சார்பில் நலதிட்ட உதவிகள்.

ரமலான் பண்டிகை முன்னிட்டு 400 ஏழைகளுக்கு  தமுமுக  சார்பில்  நலதிட்ட உதவிகள்.
X
ஆரணியில் தமுமுக சார்பாக 400 ஏழை எளிய குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கினர்.
ஆரணியில் தமுமுக சார்பில் ரூ.400 மதிப்பிலான சுமார் 1லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு 400 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமுமுக நகர தலைவர் ஏ.ஜீலான் தலைமை தாங்கினார். வணிகர் அணி மாவட்ட பொருளாளர் பீ.மாலீக்பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் நவித், இளைஞரணி துணை செயலாளர் வாஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மமக நகர செயலாளர் சையத்ஆதம் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாவட்ட தலைவர் எச்.ஜமால், தமுமுக மாவட்ட செயலாளர் ஏ.அப்துல்ரஹீம், ஆரணி பென்ஷன் லைன் மஜீத் முத்தவல்லி இ.எஸ்.பி.சலீம், காஜிபுரா பள்ளிவாசல் முத்தவல்லி நாசர், துணைமுத்தவல்லி ஹாரூண், பெரிய பள்ளி வாசல் முத்தவல்லி அப்சல்பாஷா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இதில் நிர்வாகிகள் ரபீ, எஸ்.மொய்தீன், எஸ்.கே. லாலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பணிகளை இ.எஸ்.பி.ஆரீப், எம்.ஆர்.அசேன், உமர், வதூத்ஷெரீப், ரிஸ்வான்கான், அல்லாபகஷ், சதாம், மாபூப், நாசர், யாகூப், ஆஷீக், அசேன், தஸ்தகீர் செய்திருந்தனர். முடிவில் இ.எஸ்.பி.ஆசிப் நன்றி கூறினார்.
Next Story