விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் 400க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தி

X
பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் 400க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்த வழக்கறிஞர் குமரனை காயப்படுத்திய புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தேனி வழக்கறிஞர் ஈஸ்வரன் அளித்த புகாருக்கு எப் ஐ ஆர் பதிவு செய்ய மறுப்பதை கண்டித்தும், தேனி வழக்கறிஞர் மிதுன் சக்கரவர்த்தி மீது பொய்யாக புனையப்பட்ட வழக்கில் கைது செய்த காவல் ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடைபெற்ற ஜாக் அமைப்பின் ஆலோசனையின் அடிப்படையில் 400க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

