விருத்தாசலத்தில் 400 ரூபாய்க்கு 300 மில்லி பெட்ரோல் போட்டதால் அதிர்ச்சி
Virudhachalam King 24x7 |4 Sep 2024 5:56 PM GMT
போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
விருத்தாசலம் காவல் நிலையம் எதிரில் கடலூர் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பங்கில் விருத்தகிரிகுப்பம் பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது 400 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளார். அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர் 400 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டதாகவும், அதில் 100 ரூபாயை தனது சொந்த அக்கவுண்டுக்கு ஜிபே செய்ய கூறியதுடன், மீதி உள்ள 300 ரூபாயை பெட்ரோல் பங்க் வங்கி கணக்குக்கு ஜிபே செய்ய கூறியதாக கூறப்படுகிறது. அதன்படி கலைவாணன் தனது நண்பரான இளஞ்செழியன் வங்கி கணக்கில் இருந்து 400 ரூபாயை ஜிபே மூலம் செலுத்தியுள்ளார். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு பெட்ரோல் பங்கில் நின்றவாறே வண்டியின் பெட்ரோல் டேங்கை ஆட்டி பார்த்த போது அதில் பெட்ரோல் இல்லாததை உணர்ந்தார். தொடர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கேட்டபோது 400 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டு விட்டேன் என கூறியுள்ளார். பெட்ரோல் பம்பின் மீட்டரை பார்த்தபோது மீட்டரும் செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தண்ணீர் பாட்டிலில் பெட்ரோலை பிடித்து பார்த்தபோது அதில் 300 மில்லி லிட்டர் மட்டும்தான் இருந்தது. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த கலைவாணன் அவர்களிடம் கேட்டபோது பங்க்கில் வேலை செய்யும் பங்க் ஊழியர்கள் பெட்ரோல் பங்கை விட்டு வெளியே போங்க, உங்களால் முடிந்ததை பாருங்க, என தரக்குறைவாகவும் அசிங்கமாகவும் திட்டியுள்ளார். இது குறித்து தகவல் அறியும் விரைந்து வந்த கலைவாணனின் உறவினர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர செயலாளர் சேகர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பெட்ரோல் பங்கை கண்டித்து போராட்டம் நடத்த முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் காவல் நிலையம் சென்று கலைவாணன் புகார் அளித்ததன் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் தான் 220 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதாகவும் வண்டியில் பெட்ரோல் காண்பிக்கவில்லை எனவும் கூறினார். அதனைத் தொடர்ந்து அவரது பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோலை பிடித்து பார்த்தபோது அதில் ஒரு லிட்டர் 200 மில்லி லிட்டர் மட்டும் தான் இருந்தது. இதேபோல் அடுக்கடுக்காய் வந்த வாகன ஓட்டிகள் இந்த பெட்ரோல் பங்கில் தொடர்ந்து இதுபோன்ற முறைகேடுகள் நடந்து வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story