சட்டவிரோத மது விற்பனை. ரூபாய் 4,000- மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்.

சட்டவிரோத மது விற்பனை. ரூபாய் 4,000- மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்.
சட்டவிரோத மது விற்பனை. ரூபாய் 4,000- மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல். காமராஜ் மார்க்கெட் அருகே சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் டிசம்பர் 9ஆம் தேதி காலை 9 மணி அளவில், காமராஜ் மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. இந்த சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, கிழக்கு நஞ்சையா தெருவை சேர்ந்த சேகர் மகன் குணா என்கிற குணசேகர் வயது 38 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 375 மில்லி அளவு கொண்ட 14 மது பாட்டில்களையும், 750 மில்லி அளவு கொண்ட ஒரு மது பாட்டில் என மொத்தம் ரூபாய் 4000 மதிப்புள்ள 15 மது பாட்டில்களையும், ரூபாய் 250-தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் குணா என்கிற குணசேகர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல்துறையினர்.
Next Story