குடகனாற்றில் 4,000-கன அடி நீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு.

குடகனாற்றில் 4,000-கன அடி நீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு.
குடகனாற்றில் 4,000-கன அடி நீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், அழகாபுரி பகுதியில் அமைந்துள்ளது குடகனாறு அணை. குடகனாற்றின் கடைமடை பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி உள்ளது. இந்த அணையில் இருந்து பெரும்பாலும் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு வந்து சேர்வதே இல்லை. இதனால் ஆண்டு முழுவதும் கடைமடை பகுதி காய்ந்து கிடக்கும். தற்போது தொடர்ந்து தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் குடகனாறு அணையின் கொள்ளளவான 27 அடியில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 25.89 - அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் 4000 கன அடி தண்ணீரை அப்படியே குடகனாற்றில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கடைமடை பகுதியான அரவக்குறிச்சியின் பண்ணப்பட்டி பகுதிக்கு ஆற்றின் இரு கரைகளையும் தண்ணீர் தொட்டு செல்கிறது. இது அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
Next Story