என் புதூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது.ரூ.4,000 மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்.

என் புதூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது.ரூ.4,000 மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்.
என் புதூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது.ரூ.4,000 மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 4-ம் தேதி மதியம் 3 மணி அளவில், மண்மங்கலம் அருகே என் புதூரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அருகில் உள்ள பகவதி தெருவில் மது விற்பனை நடப்பது குறித்து தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்த அன்பழகன் மனைவி பிரியா வயது 42 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் சுமார் நான்காயிரம் மதிப்புள்ள 4- குவாட்டர் மது பாட்டில்கள், 12 ஆப் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிரியா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிறகு அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story