கரும்பு டன் கொள்முதல் விலை ரூ.4,000 மோகனுார் சர்க்கரை ஆலை அறிவிப்பு.

X
Paramathi Velur King 24x7 |31 May 2025 8:15 PM ISTகரும்பு டன் கொள்முதல் விலை ரூ.4,000 மோகனுார் சர்க்கரை ஆலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பரமத்தி வேலூர்,மே.31: மோகனுார் கூட்டுறவு சர்க் கரை ஆலை டி.ஆர்.ஓ., குப்பு சாமி வெளியிட்ட அறிக்கை: மோகனுார் கூட்டுறவு சர்க் கரை ஆலை அங்கத்தினர் நலன் கருதி, 2024-25 ஆண்டு அரவை பருவத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள கரும்பு கிரய தொகை டன் ஒன்றுக்கு, 3,151 ரூபாய் நிலுவையின்றி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. மாநில அரசு வழங்கும் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 349 ரூபாய் வீதம் நேரடியாக அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும் 2025-26ம் ஆண்டு அரவை பருவத்திற்கு குறைந் தபட்ச ஆதார விலை மற்றும் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து கரும்பு கிரய தொகை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க மானிய திட்டங்களான சொட்டு நீர் பாசனம் அமைத்து 4.5 அடி அகலப் பாரில் பருசீவல் நாற்றுகள் ஒரு பரு கரணை நடவு, அகலப்பார் நடவு முறை சோகை பரப்புதல்,சோகை துாளாக்குதல் ஆகியவற்றிற்கு, தனித்தனியே அங்கத்தினர்களுக்கு, ஆலை மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மானிய விலையில் உயிர் உரங்கள், ஆலையில் தயாரிக் கப்படும் பயோ கம்போஸ்ட் இயற்கை உரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய அங்கத்தினர்கள் அனைவரும், அதிக பரப்பளவில் கரும்பு பயிரிட்டு, அனைத்து மானிய பலன்களையும் பெற்று . பயன்பெறலாம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
