கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்.
பரமத்தி வேலூர் அருகே பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்.
பரமத்தி வேலூர், டிச. 30- பரமத்திவேலூர் தாலுகா பஞ்சப்பாளையம் பிரிவு சாலை அருகே பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாணிக்கநத்தம், வீரணம் பாளையம், கோப்பணம் பாளையம், இருக்கூர் ஆகிய நான்கு பஞ்சாயத்துகளில் 1,000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. மாணிக்கநத்தம், இருக்கூர் பஞ்சாயத்துக்கு இடைப்பட்ட பகுதியான பஞ்சபாளையம் பிரிவு சாலை அருகே பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள அப்பகுதியில் சுமார் 10,000 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள், கால்நடைகள் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகும். எனவே அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நேற்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தில் பரமத்தி வேலூர் அதிமுக சட்டசபை உறுப்பினர் சேகர், கொங்குநாடு இளைஞர் பேரவை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுசாமி, அனைத்து கட்சி மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் மாணிக்கநத்தம், வீரணம் பாளையம், கோப்பணம் பாளையம், இருக்கூர் ஆகிய நான்கு பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மேலும் உண்ணாவிரதத்தின் போது பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர் பொதுமக்களிடம் கூறுகையில் இந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் இல்லையென்றால் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடுவது அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்படும் என்று தெரிவித்தார். பட விளக்கம் : பரமத்தி வேலூர் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ சேகர், விவசாயிகள், பொதுமக்கள்
Next Story