ஜெயங்கொண்டத்தில் தமிழ் பாரம்பரியத்துடன் சமத்துவ பொங்கல்: சிலம்பம்,பரதமாடி சூரிய பகவானுக்கு வழிபாடு

ஜெயங்கொண்டத்தில் தமிழ் பாரம்பரியத்துடன் சமத்துவ பொங்கல்: சிலம்பம்,பரதமாடி சூரிய பகவானுக்கு வழிபாடு
X
சமத்துவ பொங்கல் கொண்டாட தமிழனை வந்தாரா!! குலவைச் சத்தம் காதை பிளக்குது: தமிழ் பாரம்பரியத்துடன் சமத்துவ பொங்கல்: சிலம்பம்,பரதமாடி தமிழன்னை முன்பு சூரிய பகவானை வழிபட்டனர்.
அரியலூர், ஜன.13- தமிழர்கள் கொண்டாடப்படும் பண்டிகளில் மிகவும் சிறப்புமிக்க பண்டிகையாக பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம். மேலும் தமிழர்களின் சிறப்பை பறைசாற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருப்பதால், தமிழக அரசு இப்பண்டிகையை சமத்துவ பொங்கலாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் கொண்டாடி உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் பல்வேறு ஊர்களில் இருந்து தமிழ் பற்றாளர்கள் திரண்டு கொண்டாட தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டியில் அமைந்துள்ள தமிழர் நீதிக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பற்றாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த பொங்கல் பானையில் பொங்கல் வைத்தனர். அப்போது பொங்கல் பொங்கியதும், கோஷம் எழுப்பி பொங்கலோ பொங்கல் என ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் செங்கரும்புகளை தோரணமாக்கி, வாழை இலையை விரித்து, பச்சரிசி, வெல்லம் கலந்த பொங்கலை படையலிட்டு, தேங்காய், பழம் வைத்து தமிழன்னை முன்னிலையில் சூரியனுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபட்டனர். வழிபாட்டின் போது அங்கு தமிழ் வளர்க சூரிய பகவானே தமிழ் கலாச்சாரம் வாழ்க வாழ்கவே சூரிய பகவானே வருக வருக தமிழைக் காக்கும் சூரிய பகவானே வருக வருக ! தமிழ் கலாச்சாரத்தை காக்கும் சூரிய பகவானே வருக வருக தமிழ் பண்பாட்டை காக்கும் சூரிய பகவானே வருக வருக விவசாயத்தை காக்கும் சூரிய பகவானே வருக வருக என கோஷமிட்டு சூரிய பகவானுக்கு தங்களது நன்றி கடன் செலுத்தும் விதமாக வழங்கினர். அதனைத் தொடர்ந்து சாதி, மதம், பேதமின்றி அனைவருக்கும் விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது. முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்க நிறுவனத் தலைவர் சுபா இளவரசன் தலைமையில் சிலம்பம் மற்றும் பரதநாட்டியம் ஆடிய மாணவர்களை வாழ்த்தி பேசி அவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். அதேபோல் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் திருவள்ளுவர் கேடயம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது :-தமிழ் இன உணர்வையும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் பற்றி சிறப்புரையாற்றினார் அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும், வந்திருந்த அனைவருக்கும் தமிழ் கலாச்சாரப்படி வேட்டி சேலை இலவசமாக வழங்கியதுடன் அத்துடன் மரக்கன்றுகளையும் வழங்கி உற்சாகப்படுத்திய தமிழன் நீதி கட்சி தலைவர் சுபா இளவரசனுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story