கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு திருச்செங்கோடு பராமரிக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி

கரூரில் கடந்த 27ஆம் தேதி நடந்த கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி  உயிரிழந்த 41 பேரின் ஆன்மா சாந்தி அடையவும் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பராமரிக்கும் கரங்கள் இல்ல ஆதரவற்ற குழந்தைகள் 30 பேர்மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர்அஞ்சலி செலுத்தினர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அண்ணா சிலை அருகே கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த பரப்புரரை  கூட்ட நெரிசலில் 41 பேர்  உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த நபர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு பராமரிக்கும் கரங்கள் இல்ல ஆதரவற்ற குழந்தைகள் இல்ல நிர்வாகி பீட்டர் செல்வராஜ் தலைமையில் 30க்கும்மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக  கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தனர். அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அஞ்சலி பதாகைக்கு முன்பு மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஒவ்வொருவரும் பதாகை முன்பு வைக்கப்பட்டிருந்த மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தனர். இதுகுறித்து இல்ல நிர்வாகி பீட்டர் செல்வராஜ் பேசும்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த அஞ்சலி கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ஆதரவற்ற இல்ல குழந்தைகள் பங்கேற்று தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.இந்தக் காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உருகுவதாக இருந்தது.
Next Story