ரூ. 4.11 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை.

X
Paramathi Velur King 24x7 |6 Aug 2025 6:18 PM ISTரூ. 4.11 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை மாவட்ட செயலாளர் மூர்த்தி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
பரமத்தி வேலூர், ஆகஸ்ட்.6: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரை ஆத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளாபாளையத்தில் ரூ. 4.11 லட்சம் மதிப்பில் மாரியம்மன் கோவில் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு கபிலர்மலை மத்திய திமுக செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
