சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 41.20 லட்சம் வேளாண் பொருட்கள் ஏலம் போனது.

சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 41.20 லட்சம் வேளாண் பொருட்கள் ஏலம் போனது.
சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 41.20 லட்சம் வேளாண் பொருட்கள் ஏலம் போனது. வேலாயுதம்பாளையம்சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் தேங்காய், எள் போன்றவற்றை அருகே உள்ள சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று அங்கு நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 5,115 கிலோ தேங்காய் விற்பனைக்கு வந்தது. இந்த தேங்காய்கள் 3,05,744 ரூபாய்க்கு ஏலம் போனது. இதே போல கொப்பரை தேங்காய் 11, 716 கிலோ விற்பனைக்கு வந்தது.இந்த கொப்பரை தேங்காய் ரூபாய் 24,86,349-க்கு விற்பனை நடைபெற்றது. இதே போல சிகப்பு எள்13,747 கிலோ விற்பனைக்கு வந்தது. மொத்தம் சிகப்பு எள் 13,28,747 ரூபாய்க்கு விற்பனையானது. ஆக மொத்தம் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 41,20,840 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
Next Story