அங்கராயநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 41.25 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை ஏறி புணரமைப்பு பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

X
அரியலூர், ஜூன்.8- அரியலூர் மாவட்டம் அங்கராயநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 29.65 லட்சம் மதிப்பீட்டில் கருப்புசாமி கோயில் முதல் வானதிரையன்பட்டினம் சாலை வரை மெட்டல் சாலை அமைக்கும் பணி ரூபாய் 2.20 லட்சத்து மதிப்பீட்டில் அங்கராயநல்லூர் கட்டாகுளம் ஏரி 4ணரக்கும் பணியையும், ரூபாய் 9.40 லட்சம் மதிப்பீட்டில் உத்திரக்குடி பெரிய ஏரி புனரமைக்கும் பணி உள்ளிட்டவைகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம், பொறியாளர் குமார் உள்ளிட்ட பாலர் கலந்து கொண்டனர்.
Next Story

