மாபெரும் புத்தகத் திருவிழா நான்காம் நாள் நிகழ்ச்சியில் சொற்பொழிவு ஆற்றிய கு.ஞானசம்பந்தன்.

மாபெரும் புத்தகத் திருவிழா நான்காம் நாள் நிகழ்ச்சியில் சொற்பொழிவு ஆற்றிய கு.ஞானசம்பந்தன்.
X
நாமக்கல் மாவட்டம் ” 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 4-ஆம் நாள் நிகழ்ச்சியில் முனைவர் கு.ஞானசம்பந்தன் ”கற்கை நன்றே” என்ற தலைப்பிலும், நாமக்கல் மகிழ்ச்சி மன்ற தலைவர் ந.ராஜேந்திரன் அவர்கள் ”மகிழ்வித்து மகிழ்வோம்” என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினார்கள்.
நாமக்கல் மாநகராட்சி, பரமத்தி சாலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 4-ஆம் நாள் நிகழ்ச்சியில் முனைவர் கு.ஞானசம்பந்தன் ”கற்கை நன்றே” என்ற தலைப்பிலும், நாமக்கல் மகிழ்ச்சி மன்ற தலைவர் ந.ராஜேந்திரன் ”மகிழ்வித்து மகிழ்வோம்” என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினார்கள். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் முனைவர் கு.ஞானசம்பந்தன் புத்தகக் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, செல்ஃபி பூத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.நாமக்கல் மாவட்டத்தில், 3-ஆம் ஆண்டு மாபெரும்”புத்தகத் திருவிழா” 1.2.2025 முதல் 10.02.2025 வரை 10 நாட்கள் பரமத்தி சாலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இப்புத்தக திருவிழாவானது 80-க்கும் மேற்பட்ட அரங்குகள், 20 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட இயல், இசை கலை வளர்மணி விருது பெற்ற எஸ்.மணிகண்டன் சிவன் பார்வதி தப்பாட்டம் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 4-ஆம் நாள் நிகழ்ச்சியில் நடைபெற்ற மாறுவேடப்போட்டியில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, கந்த சுவாமி கண்டர் கல்லூரி மற்றும் பாவை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கப்பட்டது. முன்னதாக மாபெரும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகள், அறிவியல் கோளரங்கம், மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி அரங்கு மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும், புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி பூத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.05.02.2025 அன்று சொல்வேந்தர் சுகிசிவம் ”செய்யும் தொழிலே தெய்வம்” என்ற தலைப்பிலும், வேலூர் நாங்கள் இலக்கியம் தலைவர் மருத்துவர் க.முத்துக்குமார் ”வெல்க தமிழ்” என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள். மேலும், நாமக்கல் வேலூர், தமிழன் கலைக்குழு சரவணன் பொக்குழி கலைநிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாடகப்போட்டிகள் நடைபெறவுள்ளன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சாந்தா அருள்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எம்.லீலாகுமார், உதவி ஆணையர் (கலால்) சிவக்குமார், குறிஞ்சி கல்வி நிறுவனங்கள் தாளாளர் கே.தங்கவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருமதி மு.கிருஷ்ணவேணி, மாவட்ட நூலக அலுவலர் (பொ) ச.தேன்மொழி உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story