அரசு தடை செய்யப்பட்ட ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள

X
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை புதுப்பாலம் அருகே, நாகை மாவட்ட சிறப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அக்பா்அலி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், காரில் குட்கா, குலிப் போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர், காரில் இருந்த 39 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி, காரில் இருந்த 2 பேரையும் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில். பெரியகுத்தகை கிராமத்தில் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. மேலும், புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தவர்கள், பெரியக்குத்தகை கிராமம் மல்லர்புரம் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் (45), செல்வராசு (42) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது. அதன் பேரில், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார், வழக்கு பதிவு செய்து ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், கடத்தி வந்த காரையும் பறிமுதல் செய்து, சுவாமிநாதன், செல்வராசு ஆகியோரை கைது செய்தனர்.
Next Story

